உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.ஐ., தற்கொலை முயற்சி

எஸ்.ஐ., தற்கொலை முயற்சி

சிவகங்கை: சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 53. இவர் சிங்கம்புணரி போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ., யாக பணிபுரிகிறார். இன்று காலை ரோந்து பணிக்காக பஸ் நிலையம் வந்துள்ளார். அங்கு அவருக்கும் அவரது மனைவி தங்கத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மனைவியை பஸ்சில் ஊருக்கு ஏற்றிவிட்டு அருகே உள்ள பகுதிக்கு சென்று பாக்கெட்டில் வைத்திருந்த பாட்டில் விஷத்தை கூல்டிரிங்க்ஸில் கலந்து குடித்துள்ளார். இதை கவனித்த அவரது மனைவியும் சக போலீசாரும் அவரை மீட்டு உடனடியாக சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். எஸ்.ஐ., பாலசுப்ரமணியம் ஏற்கனவே பெரம்பலூரில் வேலை பார்த்து வந்த நிலையில் தீவிரமான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை