மேலும் செய்திகள்
போதிய பஸ் வசதியின்றி ஆபத்து பயணம்
09-Jul-2025
சிவகங்கை: நிறுத்தப்பட்டுள்ள சிவகங்கை - பச்சேரி அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர்.சிவகங்கை ஒன்றியம் முளக்குளம், சருகனேந்தல் உள்ளிட்ட கிராம மக்களுக்காக சிவகங்கையில் இருந்து பச்சேரி வரை அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 5 ஆண்டிற்கு முன்பு சிவகங்கையில் இருந்து பச்சேரிக்கு அரசு டவுன் பஸ் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்தது.கடந்த ஒரு ஆண்டிற்குமுன் முளக்குளம் - சருகனேந்தல் இடையே பாலம், சாலை அமைக்கும் பணிக்காக சிவகங்கை -பச்சேரி இடையே ஓடிய டவுன் பஸ்சை நிறுத்தினர். தற்போது இந்த பாலம், பணி முடிந்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது.நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வரவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.முளக்குளம் முத்துச்சாமி கூறியதாவது:பாலம் மற்றும் ரோடு அமைக்கும் பணிக்காக பஸ்சை நிறுத்திவிட்டனர். இப்பணி முடிந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் மீண்டும் பஸ்களை இயக்காததால், கிராமப்புற மக்கள் வேம்பத்துார், பச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல 2 முதல் 4 கி.மீ., வரை நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை காலை, மாலை இருவேளையும் இயக்க வேண்டும், என்றார்.
09-Jul-2025