உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மீனாட்சி நகரை மழை நீர் சூழ்ந்தது

சிவகங்கை மீனாட்சி நகரை மழை நீர் சூழ்ந்தது

சிவகங்கை, : சிவகங்கை நகராட்சி 8 வது வார்டில் உள்ளது மீனாட்சி நகர். இந்த நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்தப் பகுதி தாழ்வானது என்பதால் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் மீனாட்சி நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் மீனாட்சி நகரில் மழைநீர் வடிகால் கட்டி மழைநீர் தேங்காமல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை