உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி தலைவருக்கு மிரட்டல் வந்ததை அடுத்து நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நகராட்சி தலைவர் (தி.மு.க.,) துரைஆனந்த். இவரது நிறுவனத்திற்கு செப்., 23 அன்று இரவு 8:30 மணிக்கு சென்ற வேலுாரை சேர்ந்த நல்லுச்சாமி, இடைக்காட்டூர் அஜித் ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து அவரிடம் போனில் பேசியும் மிரட்டியதாக சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தை அடுத்து நல்லுச்சாமி, அஜித் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு சிவகங்கை எஸ்.பி., யிடம் மனு அளித்தார். செப்.,29ல் நடந்த நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றினர். இதையடுத்து நேற்று முதல் நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை