சிவகங்கை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் அக்.,3 முதல் தசரா விழா
சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் அக்., 3 முதல் 12 வரை தசரா விழா நடைபெற உள்ளது.சிவகங்கை அரண்மனை வளாகத்தில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு தசரா விழா நடைபெறும்.இந்த ஆண்டு அக்., 3 ம் தேதி மாலை 6:00 மணிக்கு இசையுடன் தசரா விழா தொடங்குகிறது. அன்று இரவு அம்மன் ராஜாங்கஅலங்காரத்தில் காட்சி அளிப்பார்.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கன்யாகுமரி, சிவபூஜை, அன்னபூரணி, மீனாட்சி, கருமாரி அம்மன், லட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருள்வார்.அக்., 4 ல் திருவிளக்கு பூஜை, 7 ல் லட்சார்ச்சனை, அக்., 9 ல் தசரா விளையாட்டு போட்டிகள், ஒவ்வொரு நாளும் அரண்மனை வளாகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகிக்கிறார். உபயதாரர்கள் மகேஷ்துரை, ரங்கராஜன் (எ) பாப்பாத்துரை குடும்பத்தினர் உள்ளனர்.தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர். விழா பொறுப்பாளராக மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமையில் குழுவினர் செயல்பட உள்ளனர்.