10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம்
சிவகங்கை : தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 98.31 சதவீத தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.சிவகங்கை மாவட்டத்தில் 278 பள்ளிகளை சேர்ந்த 8,870 மாணவர், 8,809 மாணவியர் என 17,679 பேர் தேர்வு எழுதினர். இதில், 8,662 மாணவர், 8,718 மாணவியர் என 17,380 பேர் தேர்ச்சி பெற்று, 98.31 சதவீதம் எடுத்து மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்தது.இம்மாவட்டத்தில் உள்ள 137 அரசு பள்ளிகளில் 7,571 மாணவர் தேர்வு எழுதியதில், 7,381 பேர் தேர்ச்சி பெற்று 97.49 சதவீதம் எடுத்து, அரசு பள்ளிகளிலும் மாநில அளவில்முதலிடத்தை சிவகங்கை மாவட்டம் பிடித்தது. கணிதத்தில் 49, அறிவியல் 211, சமூக அறிவியலில் 511 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். மாவட்ட அளவில் 278 பள்ளிகளில் 175 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன.