உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வளர்ச்சி பணிகளில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை

வளர்ச்சி பணிகளில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை

சிங்கம்புணரி : ''வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சிங்கம்புணரியில் கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாத்தூரில், தேசிய வேலை உறுதி திட்டம், கிராம நிர்வாக அலுவலக செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அ.காளாப்பூர் ஊராட்சியில் 37.90 லட்ச ரூபாயில் நடக்கும் தார்சாலை அமைக்கும் பணி, 8 லட்ச ரூபாயில் சமுதாய கூட பணிகள்; எஸ்.எஸ்.கோட்டையில் தார்சாலை பணிகளை பார்வையிட்டார். அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம், சத்துணவு வழங்கும் பணிகளையும் பார்வையிட்டார். வளர்ச்சி திட்ட பணிகள் செயலாக்க அலுவலர் கண்காணிப்பில் நடக்கவேண்டும். வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ