மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை அரசு ஐ.டி.ஐ.,க்கு புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் உள்ளதால், 'குதிரை லாயம்' போல் காட்சி தரும், வகுப்பறையில் இடநெருக்கடியால், மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயில்கின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு ஐ.டி.ஐ., செயல்படுகிறது. இங்கு பிட்டர், கம்ப்யூட்டர் சயின்ஸ், வெல்டர் உட்பட 6 பிரிவுகளில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாவட்ட தலைநகரான இங்கு, தொழிற்கல்விக்கென வேறு அரசு ஐ.டி.ஐ.,க்கள் இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் இங்கு அதிகளவில் படிக்கின்றனர்.
வகுப்பறைக்கென தனிக்கட்டடம் இன்றி, குதிரை லாயம் போல் உள்ள 'ஆஸ்பெட்டாஷ்' கூரையின் கீழ் மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, பிராக்டிக்கல் செய்து பழக, பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு இடையே வகுப்பறை நடக்கிறது. இடநெருக்கடியால், மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள கலெக்டர் அலுவலக வளாக விளையாட்டு திடலில், மாணவர்கள் தரையில் உட்கார்ந்து மாணவர்கள் படிக்கின்றனர். வசதிகள் இல்லை: இங்கு, மாணவிகளுக்கென பாதுகாப்பான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி இல்லை. இப்பிரச்னையை தவிர்க்க முத்துப்பட்டியில், புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக இப்பணி கிடப்பில் உள்ளது. இதனால், அரசு ஐ.டி.ஐ.,க்கான புதிய கட்டடமின்றி மாணவர்கள் இடநெருக்கடியில் தங்கி படிக்கின்றனர். இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இளங்கோ கூறுகையில்,'' நாங்கள் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்ககூடாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்தி போட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago