மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
சிவகங்கை : தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைவால், கிலோ 27 ரூபாய்க்கு விற்கிறது. அடுத்த மாதம் வரத்து அதிகரித்து 20 ரூபாய் வரை குறையும் என விவசாயத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 0.35 லட்சம் எக்டேரில், சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டன. 3.40 லட்சம் டன் உற்பத்தியானது. கர்நாடக மாநில வெங்காய வரத்தை பொறுத்து தான் தமிழக சந்தைகளில் வெங்காய விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இருப்பில் உள்ள வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. உயர்வு: தற்போது வரத்து குறைவால், தட்டுப்பாடு காரணமாக வெங்காய விலை கிலோவிற்கு 24 - 27 ரூபாய் வரை விற்கிறது. தமிழகத்தில் 0.35 எக்டேரில் தற்போது கரீப் பருவ வெங்காயம் நடவு செய்யப்படுகிறது. இவை செப்.,.அக்., அறுவடைக்கு வரும். அது வரை வெங்காயத்தின் விலை உயரும். விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' அடுத்த மாதம் வெங்காயம் அறுவடைக்கு வரும். இதனால், வரத்து அதிகரித்து, விலை கிலோவிற்கு 15- 20 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago