மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
சிவகங்கை : மின்வாரியத்தில் தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்வதால் விபத்தும், அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது. மின் இணைப்புகளுக்கு தேவையான கண்டக்டர், இன்சுலேட்டர், ஸ்டே கம்பி, கிராஸ் கம்பி உள்ளிட்ட மின் பயன்பாட்டிற்கான பொருட்களை தனியார் உற்பத்தியாளர்கள், அரசு சார்பு நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் மூலம் மின் வாரியம் வாங்கி பயன்படுத்துகிறது. மின் கம்பங்களை மின் வாரியமும் தயார் செய்கிறது. தனியார், அரசு சார்பு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் மின் உற்பத்தி பொருட்களை அரசு பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்த பின்னரே பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை: இன்சுலேட்டர், கண்டக்டர் போன்றவற்றை பரிசோதனை செய்யும் போது அவற்றின் மின்கடத்தும் திறனை விட இருமடங்காக மின்சாரத்தை அதில் செலுத்தி பரிசோதிக்க வேண்டும். அப்போது தான் இடி, மின்னல் போன்ற சமயங்களில் கூடுதல் மின்சாரம் கடக்கும் போது இன்சுலேட்டர் வெடிக்காமல், கண்டக்டர்கள் அறுந்து கீழே விழாமல் இருக்கும். ஆனால் இந்த பொருட்கள் சோதனை செய்யப்படாமல் நேரடியாக பயன்பாட்டிற்கு வந்து விடுகிறது. முறைகேடு: கடந்த ஆட்சியில் மின் வாரியத்திற்கு வழங்கப்பட்ட இன்சுலேட்டர்கள், கண்டக்டர்கள் தரமற்றவையாக இருந்ததால் மின் உற்பத்தி பொருட்கள் பழுதாகி பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' இன்சுலேட்டர் பழுதாவதற்கு காரணம் தரம் குறைவு மட்டுமே. கடந்த ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 6 ஆயிரம் இன்சுலேட்டர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை பழுதானது. இதனால் அந்த நிறுவனத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்து புதிய கம்பெனி இன்சுலேட்டர்களை வாங்கி பயன்படுத்தினோம்,'' என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago