மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
2 hour(s) ago
பயிற்சி முகாம்
2 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
2 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
2 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
2 hour(s) ago
சிவகங்கை : ''சிவகங்கை நகராட்சி 6வது வார்டை 'சுகாதாரமான வார்டாக' மாற்றுவதே லட்சியம்,'' என தி.மு.க., வேட்பாளர் என்.கனகராஜன் தெரிவித்தார். சிவகங்கை நகராட்சியில்வேட்பு மனு தாக்கல் செய்த அவர் கூறியதாவது: சிவகங்கை நகராட்சி 6வது வார்டில் கோகுலேஹால் தெரு, சுத்தானந்தபாரதி தெரு, ராணிஅம்மையார் தெரு, லட்சுமணன் தெரு உள்ளிட்ட தெருக்களில் தினமும் குடிநீர் கிடைக்க வழி வகை செய்வேன். கழிவு நீர் கால்வாய் சிலபகுதிகளில் அமைக்கப்படவில்லை. அங்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுப்பேன்.வார்டில் உள்ள தெருக்களில் ரோடு, கால்வாய்கள், துப்புரவு பணிகளை மேற்கொண்டு சுகாதாரமான வார்டாக மாற்ற பாடுபடுவேன். தினமும் வார்டில் உள்ளவர்களை சந்தித்து குறைகளை கேட்டு, உறுதியாக நிறைவேற்றி தருவேன். எனக்கு வாக்களித்து என்னை தேர்வு செய்தால் வார்டு மக்களுக்கு உண்மை விசுவாசியாக இருப்பேன். தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சூர்யநாராயணன் உட்பட தி.மு.க., 6வது வட்ட தேர்தல் பணிக்குழுவினர் பங்கேற்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago