மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
சிவகங்கை:வங்கி ஊழியர்கள் நேற்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், மாவட்டத்தில் 188 வங்கி கிளைகள் மூடப்பட்டன. இதனால், பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் பாதித்தது.அன்னிய முதலீட்டை ஆதரித்து தனியார் வங்கிகள் மூலம் ஒப்பந்த பணியாளர்களை நிர்ணயம் செய்வதை கண்டித்து, அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் நாடு முழுவதும் 'ஸ்டிரைக்' நடந்தது.சிவகங்கை மாவட்டத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சார்பில் 188 கிளைகள் செயல்படுகின்றன. இதில், கடைநிலை ஊழியர் முதல் முதுநிலை மேலாளர் வரை 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், வங்கியில் பணம் எடுக்க, போடவோ முடியாமல் கணக்காளர்கள் திணறினர். குறிப்பாக அரசு சார்ந்த பணிகளுக்கு டி.டி., எடுக்க முடியாமல் போனது. இது போன்று மாவட்ட அளவில் வங்கி கிளைகள் மூடப்பட்டதால், பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்ந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க கூட்டுறவு விவசாய வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மதிமார்சலசு, பொது செயலாளர் ராமநாதன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். நேற்று ஒரு நாள் வங்கி பண பரிவர்த்தனை பணிகள் முடங்கியது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago