உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேளாண் விரிவாக்க மையத்தில் விதைகள் இருப்பு

வேளாண் விரிவாக்க மையத்தில் விதைகள் இருப்பு

காளையார்கோவில் : காளையார்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான விதைகள் இருப்பு வைத்திருப்பதாக வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கணேசன் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் ஏடீடி39(ஆடுதுறை), பிபிடி5204(டீலக்ஸ்பொன்னி) ரக விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ விதை 5.ரூபாய் வீதம் மானியத்திலும்,விதைக் கிராம திட்டத்தில் 10 டன் விதைகள் 50 சதவீதம் மானியத்திலும், மண்வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரவிதையான 'டெயின்ச்சா' 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. 'அட்மா' திட்டத்தின் கீழ் நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஐ டிசி நிறுவனத்துடன் இணைந்து விதைக்கும் கருவி கொண்டு முழு மானியத்தில் நெல் விதைப்பு செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் நிலத்தினை நன்கு சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். இது குறித்து காளையார்கோவில் வேளாண் மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை