உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.,வில் போட்டியிட விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.,வில் போட்டியிட விருப்ப மனு

சிவகங்கை : 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட செப்.,14 வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறதென,' பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கோட்ட பொறுப்பாளர் சொக்கலிங்கம் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்படுகிறது. செப்.,14ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்கள் பெறப்படும். சிவகங்கை நகர், ஒன்றியம், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் சிவகங்கை, எண்:5 அஜீஸ்தெருவில் உள்ள அலுவலகத்தில் செலுத்தலாம்.காரைக்குடி, தேவகோட்டை நகர், சாக்கோட்டை, கண்ணங்குடி, தேவகோட்டை, கல்லல், திருப்புத்தூர், சிங்கம்புணரி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் எண்:365/20 முதல்மாடி செக்காலை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செலுத்தலாம்.கட்டணம்: நகராட்சி தலைவருக்கு 2,500, பேரூராட்சி தலைவருக்கு 500, ஒன்றிய கவுன்சிலருக்கு 250, மாவட்ட கவுன்சிலருக்கு 1,000, நகராட்சி வார்டு உறுப்பினருக்கு 250, மாவட்ட வார்டிற்கு 1,000, ஊராட்சி தலைவருக்கு 250, வார்டு உறுப்பினரக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ