மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
19 hour(s) ago
பயிற்சி முகாம்
19 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
19 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
19 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
20 hour(s) ago
சிவகங்கை : கவுன்சிலிங் முடிந்து உத்தரவு பெற்றாலும், உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தான், ஆசிரியர்கள் பணியிடமாற்றம், பதவி உயர்வு செய்யப்பட உள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் நடக்கவுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. ஓட்டுச்சாவடி பணிகளுக்கு 70 சதவீதம் ஆசிரியர்களே பயன்படுத்தப்படுவர். அவர்களுக்கு, வாக்காளர்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் விபரங்களை சேகரித்தல் பணி வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, உதவி தேர்தல் அலுவலர் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.கவுன்சிலிங் : அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை மற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கான கவுன்சிலிங் கடந்த 16ல் இருந்து இன்று வரை நடக்கிறது. நிறுத்தம்: இன்றுடன் கவுன்சிலிங் முடியும் நிலையில், கடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு எந்த தேதிக்குள் மாற்று பள்ளிகளில் பணி ஏற்கவேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவர். இச்சூழலில் ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கினால், உள்ளாட்சி தேர்தலில் பாதிப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் மாறுதல் தேதியை குறிப்பிடவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago