திருப்புவனத்தில் விதிமீறி டூவீலரில் ஆறு பேர் பயணம்
திருப்புவனம்: திருப்புவனத்தில் விதி மீறி பயணம் மேற் கொள்வதை போலீசார் கண்டு கொள்ளாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வீடுகளில் பலரும் போக்குவரத்து பயன் பாட்டிற்கு டூவீலர்கள் வைத்துள்ளனர். ஆனால் டூவீலரில் விதி மீறி பயணம் செய்வது, சரக்குகளை எடுத்து செல்வது, ஆபத்தான முறையில் இரும்பு கம்பிகள், மர கட்டைகள் கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. டூவீலர்களில் அதிக நபர்களை ஏற்றி செல்வதோடு வீதி மீறி டூவீலரை ஓட்டி செல்கின்றனர். பரமக்குடி - - மதுரை 4 வழிச்சாலையில் திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் இரண்டு சிறுவர்கள், ஒரு கை குழந்தை, இரண்டு பெண்கள் ஆகிய 5 பேருடன் ஒரே டூவீலரில் வாலிபர் ஓட்டி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவர் மட்டுமே அமர கூடிய இடத்தில் நெருக்கியடித்து 5 பேர் அமர்ந்ததுடன் மடியில் ஆபத்தான முறையில் கை குழந்தையையும் கொண்டு சென்றது தான் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது.