உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புகை கக்கும் அரசு பஸ்கள் சுற்றுப்புற சூழல் பாதிப்பு

புகை கக்கும் அரசு பஸ்கள் சுற்றுப்புற சூழல் பாதிப்பு

திருப்புவனம்: திருப்புவனத்தில் புகை கக்கியபடி வலம் வரும் அரசு பஸ்களால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு டவுன் பஸ்கள் பலவும் பராமரிப்பின்றி அடிக்கடி பழுதாகி நிற்பதுடன் அதிகளவு கரும்புகையை வெளியிட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் நிற்கும் போது அரசு டவுன் பஸ்களில் இருந்து வெளியாகும் கரும்புகையால் அருகில் நிற்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். புத்தம் புதிய அரசு டவுன் பஸ்களில் கூட கரும்புகை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொலை தூர பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகள் அனைத்தும் ஹைட்ராலிக் முறைப்படி இயங்குபவவை இவற்றை சரிவர பராமரிக்காததால் பல பஸ்களில் கதவுகளை திறக்கவும் மூடவும் முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். போக்குவரத்து கழகங்கள் அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை