உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சமூகவலைதள  விழிப்புணர்வு பயிற்சி

சமூகவலைதள  விழிப்புணர்வு பயிற்சி

சிவகங்கை: சிவகங்கையில் ஆசிரியைகளுக்கான சமூக வலைதளம் குறித்த விழிப்புணர்வு 'அகல்விளக்கு' திட்ட பயிற்சி துவக்க விழா நடந்தது. சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர்கள் சமூக வலைதள விழிப்புணர்வு குறித்த உறுதி மொழியை வாசிக்க ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர். காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முருகன் தலைமையில் விரிவுரையாளர்கள் ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்தனர். அலைபேசியில் பாதுகாப்பற்ற செயலியை பதிவிறக்கம் செய்யக் கூடாது. சமூக வலை தளங்களில் தேவையற்ற விஷயங்களை பதிவிடவோ, பார்க்கவோ கூடாது என்ற விழிப் புணர்வு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, கலெக்டர் பி.ஏ.,(கல்வி) ஜெயப்பிரகாசம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ