உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாக்கோட்டை அருகே ஆபத்தான நிழற்குடை

சாக்கோட்டை அருகே ஆபத்தான நிழற்குடை

காரைக்குடி: சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகொட்டகுடி ஊராட்சியில், நென்மேனி அழகு நாச்சியேந்தல், சோனார் கோட்டை, தச்சகுடி, பெரிய கொட்டகுடி உட்பட 8 சிற்றுார்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 3 பஸ் ஸ்டாப் உள்ளன. தினமும் இங்கிருந்து பள்ளி, சல்லூரி மாணவர்கள் புதுவயல் காரைக்குடி பகுதிக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள 3 பஸ் ஸ்டாப்புகளும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பஸ் ஸ்டாப்பை புதுப்பித்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி