அரணையூர் கண்மாயில் அனுமதியின்றி மண் எடுப்பு
இளையான்குடி: இளையான்குடி அருகே அரணையூர் கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளுவ தாக புகார் எழுந்து உள்ளது. இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் வி.ஏ.ஓ., சங்க மாவட்ட செயலாளர், ஓய்வு வி.ஏ.ஓ., சுப்பிரமணியன் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அரணையூர் கண்மாய் பாசனதாரராக இருந்து வருகிறேன். இக் கண்மாயில் சில வாரங் களாக சிலர் எவ்வித அரசு அனுமதி இன்றி கோயில் கட்டப் போவதாக கூறி மண் அள்ளும் இயந்திரங் களைக் கொண்டு மணலை கடத்தி மற்றொரு இடத்தில் குவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை, வருவாய்த் துறை, தனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் உடனடியாக மண் அள்ளியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.