உள்ளூர் செய்திகள்

ராணுவ வீரர் கைது

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தில் வாலிபரை வெட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். கீழமேல்குடியை சேர்ந்தவர் ராணுவ வீரர் பாரதி 31, அக்.29ல் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இதே ஊரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் 27, என்பவருக்கும் பாரதிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கீழமேல்குடி நாடக மேடை அருகே தகராறு ஏற்பட்ட போது பாரதி, மீனாட்சி சுந்தரத்தை அரிவாளால் வெட்டினார். இதில் மீனாட்சி சுந்தரம் படுகாயமடைந்தார். மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை