உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தபால் சேமிப்பு கணக்கு புதுப்பிக்க சிறப்பு முகாம்

 தபால் சேமிப்பு கணக்கு புதுப்பிக்க சிறப்பு முகாம்

சிவகங்கை: தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவக்கி, செயல்படாமல் உள்ள கணக்குகளை புதுப்பிக்க ஜன., 1 முதல் 15 வரை சிறப்பு முகாம் நடக்கிறது என சிவகங்கை கோட்ட கண்காணிப் பாளர் பி.சுசீலா தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை தபால் கோட்டத்தின் கீழ் உள்ள தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவக்கிய வாடிக்கையாளர்கள், அக்கணக்கை தொடர்ந்து செயல்படுத்தாமல் வைத்துள்ளனர். செயல்படாமல் உள்ள கணக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள அந்தந்த தபால் நிலையங்களில் ஜன., 1முதல் 15 வரை சிறப்பு முகாம் நடைபெறும். முகாமில் சேமிப்பு கணக்கை புதுப்பிக்க, சேமிப்பு கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, ஆதார், பான் கார்டு நகல்களை சமர்பித்து புதுப்பித்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை