சிவகங்கையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி: ஜூலை 10, 11 ல் நடைபெறும்
சிவகங்கை, ஜூலை 3-பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு ஜூலை 10 மற்றும் 11 அன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெறும். ஜூலை 10 அன்று நடக்கும் போட்டியில் 1.பூனா உடன் படிக்கை, 2.கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய், 3.அரசியலமைப்பு சட்டமும், அம்பேத்கரும், 4.அம்பேத்கர் படைப்புகள் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும், 1.அம்பேத்கரும், காந்தியடிகளும், 2. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், 3.அம்பேத்கரும், சமூக நீதியும் என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி நடக்கும்.ஜூலை 11 அன்று 1.நெஞ்சுக்கு நீதி, 2. செம்மொழி மாநாடு, 3. திரைத்துறையில் கருணாநிதி, 4.அரசியல் வித்தகர் கருணாநிதி, 5. தெற்கில் இருந்து ஒரு சூரியன் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு 1. சமூக நீதி காவலர், 2. கருணாநிதியின் எழுதுகோல், 3. அவரது தமிழ்தொண்டு ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெறும். முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வீதம் வழங்கப்படும். சிறப்பு பரிசு ரூ.2,000 வழங்கப்படும். மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் தலைப்பு ஒதுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறையை தொடர்பு கொள்ளலாம். /////