மேலும் செய்திகள்
பார்க்க புதுசு; உள்ளே எல்லாமே பழசு!
10-Apr-2025
திருப்புத்துார்: திருப்புத்துாரில் வேகமாக வந்த தனியார் பஸ்சை தட்டிக் கேட்டவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி பஸ் மறியல் நடந்தது.காரைக்குடி பீர்முகமது மகன் நைனார்முகமது. இவர் தனியார் தொலைக்காட்சி கேமராமேன். நேற்று காலை காரைக்குடியிலிருந்து திருப்புத்துாருக்கு டூ வீலரில் வந்துள்ளார். திருப்புத்துார் தம்பிபட்டியில் வளைவில் பின்னால் வந்த தனியார் பஸ் வேகமாக வந்து அவரை ஒதுக்கி முந்தியுள்ளது. மேலும் தொடர்ந்து ஒலிஎழுப்பி தடுமாற வைத்துள்ளது.திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் அந்த பஸ் டிரைவரிடம் நைனார்முகமது நகர் எல்லைக்குள் வேகமாக வரலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு பஸ் ஓட்டுனர் மற்றும் அருகிலிருந்தவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தாக்கியவர்களை கைது செய்ய கோரி 2 தனியார் பஸ்களை மறித்து நிறுத்தினர். போலீசார் சமாதானப்படுத்தி பஸ்சை விடுவித்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Apr-2025