வசந்த நவராத்திரி பூஜை
தேவகோட்டை: தேவகோட்டை சவுபாக்ய துர்கை அம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையை தொடர்ந்து வசந்த நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவை முன்னிட்டு பங்குனி அமாவாசையை தொடர்ந்து ஒன்பது தினங்கள் தினமும்சவுபாக்ய துர்கை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.கோயில் நிர்வாகி ரமேஷ் குருக்கள் தலைமையில் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்தார். ஏராளமான பெண்கள் பங்கேற்று சக்தி, துர்க்கை பாடல்கள் பாடினர். மற்ற பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.