சீனிவாசன் நினைவு நாள்
திருப்புத்துார்:திருப்புத்துாரில் பா.ஜ. சார்பில் இரட்டைமலை சீனிவாசன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. காந்தி சிலை அருகில் அவரது படத்திற்கு பா.ஜ.,நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பொறுப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். பட்டியல் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் கோபால், மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜ், பொதுச் செயலாளர் ஆதீனம், தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி மற்றும் பா.ஜ. நிர்வாகிகள் பங்கேற்றனர்.