உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., ராஜேஸ்வரி 50. இதற்கு முன் கீழச்சிவல்பட்டி ஸ்டேஷனில் பணிபுரிந்த போது தனது சகோதரி ஏஜன்டாக உள்ள நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் லாபம் கிடைக்கும் என சக போலீசார், பொதுமக்களிடம் தெரிவித்து முதலீடு செய்ய வைத்துள்ளார். அதற்கான முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திரும்ப தரவில்லை. பணத்தை இழந்தவர்கள் அதுகுறித்து சிவகங்கை எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்தனர். அவரது விசாரணையின் முடிவில் சிறப்பு எஸ்.ஐ., ராஜேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ