மேலும் செய்திகள்
நாளைய (செப்.,20) மின்தடை
19-Sep-2025
சிவகங்கை : சிவகங்கை அருகே கீழக்கண்டனி உச்சப்புளியை சேர்ந்தவர் ஜனா பாரத் 27. இவரது நண்பர் கீழக்கண்டனி அருகே உள்ள உசிலங்குளம் சந்துரு 25. இருவருக்கும் மது அருந்துவதில் தகராறு இருந்தது. நேற்று முன்தினம் கீழக்கண்டனிக்கு ஜனா பாரத் சென்றார். அங்கு சந்துருவிற்கும் ஜனா பாரத்துக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்துரு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜனாபாரத்தை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த ஜனா பாரத் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போலீசார் சந்துருவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
19-Sep-2025