உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில சிலம்பம் போட்டி

மாநில சிலம்பம் போட்டி

சிவகங்கை, : தேவகோட்டையில் மாநில சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், தொடு போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் நடந்தது. அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவன் க.ஹரிராஜ் தொடுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அவரை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயா, ஜான்சார்லஸ், ஆலிஸ்மேரி, பள்ளி செயலாளர் நடேசன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raja
ஆக 19, 2025 10:43

வாழ்த்துக்கள். இந்த கலை மென்மேலும் சிறந்து விளங்க தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் கடவுள் தங்களுக்கு பரிசாக அளிப்பதற்கு கடவுளிடம் வேண்டுகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை