மாநில சிலம்ப போட்டி
தேவகோட்டை: ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி மாணவர்கள் மாநில சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் நடந்த மாநில சிலம்ப போட்டியில் முதல் பரிசை 2ம் வகுப்பு மாணவர் மிதுன் ஹரி வென்றார். மற்றும் பீனிக்ஸ் கப் ஓபன் ஆர்சரி சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழாம் வகுப்பு மாணவர் புவனேஸ்வர், ஆறாம் வகுப்பு மாணவர் சத்திரியன் முதலிடத்தையும், மூன்றாம் வகுப்பு மாணவர் அருள் மொழிச்சோழன் ௨ம் இடம், முதலாம் வகுப்பு மாணவர்கள் தஸ்வந்த், சாய்ரிஷ் ௩ம் இடம் வென்றனர். தாளாளர் கா. செல்லதுரை,முதல்வர் அம்பிகா,ஆசிரியர்கள் பாராட்டினர்.