தடகளப்போட்டி மாணவி சாதனை
சிவகங்கை: சிவகங்கை ஒன்றியம், உருளி அரசு நடுநிலை பள்ளி 8 ம் வகுப்பு மாணவி சீதா வயது 14 பிரிவு தடகளப்போட்டியில் முதலிடம் பிடித்தார். சிவகங்கையில் பள்ளி கல்வி சார்பில் குடியரசு தின மாவட்ட போட்டிகள் நடந்தது. இதில், வயது 14 க்கு உட்பட்டோர் பிரிவு தடகளத்தில் மாணவி 600 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றார். இம்மாணவி சென்னையில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என ஆசிரியர் ஜெயமுருகன் தெரிவித்தார். ///