உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாய் திட்டியதால் மாணவி தற்கொலை

தாய் திட்டியதால் மாணவி தற்கொலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த8ம் வகுப்பு மாணவி. இவர் மதகுபட்டி அருகே அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். அப்பா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்ததால் தாய் மற்றும் அண்ணனுடன் மாணவி மதகுபட்டி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தார்.தாய் கூலி வேலை செய்து வருகிறார். மாணவி அடிக்கடி அலைபேசி பயன்படுத்தி வந்தார்.தேர்வு நேரம் என்பதால் மாணவியின் தாய் போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு படிக்குமாறு கூறி திட்டியுள்ளார். மாணவி நேற்று முன்தினம் இரவில் வீட்டின் எதிரே இருந்த கருவேல மரத்தில் துாக்கிட்டு இறந்தார். மதகுபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ