சுபாஷினி பூஜை
திருப்புவனம்:திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோயிலில் சுபாஷினி பூஜை நடைபெற்றது. ஆடி மாதத்தில் இப்பூஜை 11 நாட்கள் நடத்தப்படும். 5 ம் நாளான பஞ்சமி திதி வழிபாடும் நடந்தது. நேற்று இக்கோயிலில் சுபாஷினி பூஜை ஏழு சிறுமிகளை தேர்வு செய்து அவர்களுக்கு புத்தாடை, கண்ணாடி வளையல், சீப்பு, மருதாணி, மஞ்சள், குங்குமம் வழங்கினர்.