மானியத்தில் காய்கனி விற்பனை வாகனம்
சிவகங்கை,; சிவகங்கையில் 50 பயனாளிகளுக்கு மானிய விலையில் காய்கனி விற்பனை வண்டி வழங்கியுள்ளதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் எம்.சத்தியா தெரிவித்தார். அவர் கூறியதாவது, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 50 பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி வழங்கினர். இதற்கு மானியமாக ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. திருப்புத்துார், சிங்கம்புணரி, எஸ்.புதுார், சாக்கோட்டை, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் வட்டாரத்தில் இக்காய்கனி விற்பனை கடைகள் செயல்படும், என்றார்.