கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி
சிவகங்கை:கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு மே 2 முதல் 17 வரை சிவகங்கை, காரைக்குடியில் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி சிவகங்கையில் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி, காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எளிமையாக பேசுதல், கதை கூறுதல், போட்டோ ஷீட் வீடியோ எடுத்தல், செஸ், ஓவியம், பனைவோலை வடிவமைத்தல், மண் சார்ந்த பொருள் தயாரித்தல், சிறுவர்களுக்கு திரைப்பட விமர்சனம் எழுதுதல், இசைபயிற்சி, அன்றாட அறிவியல் சோதனை ஆகிய 12 விதமான பயிற்சி அளிக்கப்படும். இதில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 பிரிவில் சேரலாம். இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்., 30 அன்று மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அனைவருக்கும் பங்கேற்பு சான்று உண்டு.விபரத்திற்கு 97877 76727ல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.