உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆற்றில் கிடந்த மனுக்கள் சர்வே துறை ஊழியர் கைது

ஆற்றில் கிடந்த மனுக்கள் சர்வே துறை ஊழியர் கைது

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் கிடந்த விவகாரத்தில், நில அளவை துறை ஊழியரை, போலீசார் கைது செய்தனர். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்கள் பட்டா மாறுதல் குறித்து வழங்கிய மனுக்கள், திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக., 29ம் தேதி கிடந்தது. திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். நில அளவை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்ததால், அந்த பிரிவில் பணியாற்றி வரும் எட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், நில அளவை பிரிவு வரைபடவாளரான மதுரை வண்டியூரைச் சேர்ந்த முத்துகுமரன், 42, என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ