குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. பிப்.2ல் அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் 4:30 மணிக்கு தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சியை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தொடங்கி வைத்தார். இன்று தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.நகரத்தார் காவடி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முக பெருமானை தரிசிக்க தேவகோட்டையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று பாதயாத்திரையாக புறப்பட்டனர். நகரத்தார் 107 பேர் காவடி கட்டி நேற்று முன்தினம் நகர்வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் வந்து தங்கினர். இக்கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நகரத்தார் காவடிகள் புறப்பட்டு நேற்று மாலை குன்றக்குடி சென்றடைந்தனர். தைப்பூச நாளான இன்று மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.