மேலும் செய்திகள்
புரவி எடுப்பு திருவிழா
08-Jun-2025
மானாமதுரை; மேலப்பிடாவூரில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழாவை கிராம மக்கள் கொண்டாடினர்.மேலபிடாவூரில் வெள்ளாரப்பன் என்ற முத்தையா அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது.விவசாயம் செழிக்க , உலக நன்மைக்காக நேற்று புரவி எடுப்பு விழா நடைபெற்றது. நேற்று காலை கிராம மக்கள் மானாமதுரைக்கு மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புரவி செய்த இடத்திற்கு வந்தனர். அங்கே பூஜைகளை செய்த பிறகு மேலப்பிடாவூர் கிராமத்திற்கு புரவிகளை துாக்கி சென்று வழிபாடு நடத்தினர். நாளை கோயில் முன் மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு, 11ம் தேதி கிடா முட்டு போட்டி நடைபெற உள்ளது.
08-Jun-2025