உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராம ஊராட்சிகளில் வரி ரசீது வழங்கும் பணி கடும் பாதிப்பு; அரசுக்கு வருவாய் இழப்பு அச்சம்

கிராம ஊராட்சிகளில் வரி ரசீது வழங்கும் பணி கடும் பாதிப்பு; அரசுக்கு வருவாய் இழப்பு அச்சம்

சிவகங்கை: தமிழகத்தில் கிராம ஊராட்சிகளுக்கான சர்வர் பழுதால், கடந்த சில நாட்களாக குடிநீர், வீடு உள்ளிட்ட வரிகளை வசூலிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.தமிழக அளவில் 375 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 12,525 கிராம ஊராட்சிகளில் 79,394 குக்கிராமங்கள் உள்ளன. தமிழக மக்கள் தொகையில் 51.5 சதவீதம் பேர் இங்கு தான் வசிக்கின்றனர். இதற்காகவே கிராம ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில், அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அரசின் வருமானத்திற்கும் கிராம மக்களின் பங்களிப்பு அதிகம். குடிநீர், வீட்டு, தொழில் வரி, கட்டட வரைபட அனுமதி, காலிமனையிடம், கடை உரிம வரிகள் மூலம் கிராம ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. ஊராட்சிகளில் வரிகள் வசூல் தொகைக்கு ஆன்லைனில் ரசீது வழங்கப்படுகிறது. சில நாட்களாக கிராம ஊராட்சி சர்வர் முடங்கியுள்ளது. வரி ரசீது வழங்க முடியாமல் ஊராட்சி செயலர்கள் தவிக்கின்றனர். உரிய காலத்தில் ரசீது கிடைக்காததால், புதிதாக வீடு கட்டியோர் மின் இணைப்பு பெற முடியாமல் காத்திருக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது: ஏப்ரலில் புதிய கணக்கு துவக்க வேண்டும். சர்வரில் அதற்கான பணி நடப்பதால் தாமதம் ஆகிறது. வரி வருவாயும் பாதிக்கத்தான் செய்கிறது. இப்பணி முடிந்ததும் ஆன்லைன்ரசீது வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை