உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்  நிதி உதவி பெறும் பள்ளிகள் புறக்கணிப்பு ஆசிரியர்கள் புகார்

கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்  நிதி உதவி பெறும் பள்ளிகள் புறக்கணிப்பு ஆசிரியர்கள் புகார்

சிவகங்கை : தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுவதாகவும் இதில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழக பள்ளி கல்வி சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை மேலும் மேம்படுத்தும் விதமாகவும் அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும் கலை வடிவங்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்தந்த கலைப்பிரிவில் வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு புத்தொளி பயிற்சி முகாம் நடத்த பள்ளி கல்விதுறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற மற்றும் கிராமிய நடனம், வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய கலை வடிவங்களில் 2022-23 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மே.19 முதல் 24 வரை 6 நாட்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான பள்ளிகளின் விவரமும் மாவட்டம் வாரியாக பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் இடம் பெறவில்லை.எனவே கலைதிருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்பதுபோல் அரசு நிதி உதவி பெறும் மாணவர்களும் பங்கேற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை