உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்வித்துறைக்கு நிதி ஒதுக்காவிட்டால் ஆசிரியர்கள் இணைந்து போராடுவர் இடைநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

கல்வித்துறைக்கு நிதி ஒதுக்காவிட்டால் ஆசிரியர்கள் இணைந்து போராடுவர் இடைநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

சிவகங்கை: தமிழக கல்வித்துறைக்கு ஒதுக்கவேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காவிட்டால் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராடுவார்கள் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது: புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்கா விட்டால் தமிழகத்திற்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார்.புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்று கொண்டால் தான் நிதி விடுவிக்கப்படும்.மும்மொழி கொள்கையை ஏற்கா விட்டால் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறி இருப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு முற்றிலும் முரணானது.இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில் தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை மத்திய பா.ஜ., அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்.எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிப்பது கூடாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதம் என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது.புதிய தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான மும்மொழி திட்டம் மாநிலங்களில் அமலாக்கம் செய்ய வேண்டும் என்பதை பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தின் முன் நிபந்தனை ஆக்கியதோடு தமிழகம் அதில் சேராததால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைத்து வேறு மாநிலங்களும் மடைமாற்றுவது முற்றிலும் தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தமிழகத்தில் சுய சார்பான மாநில கல்விக் கொள்கைக்கும் எதிராக அமைகிறது.மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து மத்திய அரசை எதிர்த்து போராடக்கூடிய சூழல் உருவாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venkatesan Srinivasan
பிப் 22, 2025 10:02

இந்த கூட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் போற்றத்தக்க ஆசிரியர் பணி மேற்கொண்டவர்கள் என்பதையும் மறந்து தீயமுக- திராவிட கும்பலின் ஊழியர்கள் போல செயல்படுகிறது. முதலில் இந்த கும்பலை கண்டிப்பாக தேசிய நீரோட்டத்தில் சேர்க்க மத்திய அரசு நிபந்தனைகள் விதிக்க வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை