உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை:பழைய பென்ஷன் திட்டம் உட்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழுவினர் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர்கள் இந்திராகாந்தி, பெரியசாமி, சரவணக்குமார் தலைமை வகித்தனர். கலைச்செல்வி, சந்திரலேகா, அழகுதேவி முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர்கள் கணேசன், வேல்முருகன், சசிக்குமார் கோரிக்கையை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டெட் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும். பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். உயர்கல்வி கற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்என வலியுறுத்தினர். * திருப்புத்துார்: திருப்புத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் முத்துமாரியப்பன், லட்சுமணன், செல்வமோகன் தலைமை வகித்தனர். மூத்த நிர்வாகிகள் சிங்கராயர், ரங்கராஜன், சேசுராஜூ, முருகையா கோரிக்கையை விளக்கி பேசினர். ஆசிரியை கற்பகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை