உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர்கள் மீது தாக்குதல்; ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர்கள் மீது தாக்குதல்; ஆசிரியர் சங்கம் கண்டனம்

சிவகங்கை; தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சங்கர் கூறியதாவது: 13 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் பகுதி நேர ஆசிரியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.வாரத்திற்கு 3 அரை நாட்கள், மாதம் 12,500 என்ற ஊதியம், மே மாதம் ஊதியம் வழங்காமை போன்ற சூழலில் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை பகுதி நேர ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாததால் அனைவரும் ஒன்று கூடி நேற்று சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசி தீர்வு வழங்காமல் போலீசாரை ஏவி அவர்களை அடக்கு முறையில் உள்ளாக்குவது கண்டனத்துக்குரியது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ