மவுண்ட் சீயோன் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவர்கள் சார்பில் சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது. இக்கல்வி நிறுவன தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகித்தார். இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் விழா உரையாற்றினார். முதல்வர் பாலமுருகன் துவக்கி வைத்தார். பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின், இயந்திரவியல் துறை பேராசிரியர் சிவசண்முகம், தஞ்சாவூர் பெரிய கோவில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நிலநடுக்கத்திற்கான பாதுகாப்பு வடிவமைப்புடன் கட்டப்பட்டது. சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், அணுகுமுறை குறித்து பேசினார். துறை தலைவர் சுந்தரவிக்னேஷ், ஐ.எஸ்.டி.இ., ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் வருகை தந்தவர்களை கவுரவித்தார். இயந்திரவியல், மின்னியல், கட்டடவியல் துறை மாணவர்கள் புதிய உற்பத்தி தொழில்நுட்பம், புதுமை சிந்தனை மற்றும் தொழில்துறை பயன்பாடுகள் குறித்து கருத்தரங்கில் அறிந்து கொண்டனர்.