ஆலய விழா துவக்கம்
காரைக்குடி: காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவகோட்டை புனித சகாய அன்னை ஆலய வட்டார முதன்மை அருட்பணியாளர் சந்தியாகு கொடி ஏற்றினார். இதில், பங்குத்தந்தை கிளமெண்ட் ராசா, மற்றும் அருட் பணியாளர்கள், இறை மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை பணிக்குழுக்கள் இணைந்து செய்திருந்தனர். திருப்பலியின் இறுதியில் சப்பர பவனி நடந்தது.