உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் சர்வ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. வேட்டையன்பட்டி என்பீல்டு காலனியில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஜூலை 8ல் யாகசாலை பூஜை தொடங்கி நான்கு கால பூஜையாக நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜை நடத்தப்பட்டது.நேற்று காலை 10:30 மணிக்கு கோபுரங்களுக்கும், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !