உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்

குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.தைப்பூசத் திருவிழா ஜன.16ல் அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சியை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தொடங்கி வைத்தார். நான்கு ரத வீதி வழியாக தேர் இழுக்கப்பட்டு தேர் நிலையை வந்தடைந்தது. இதில், காரைக்குடி, குன்றக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தைப்பூசத் திருவிழாவும் ஜன. 27ல் மஞ்சு விரட்டும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ