மூதாட்டி முகத்தை கடித்த பூனை
காரைக்குடி: குன்றக்குடியைச் சேர்ந்தவர் சுலோச்சனா 70. உடல்நிலை சரியில்லாமல் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மூதாட்டி தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியதால், உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே படுத்து துாங்கிய மூதாட்டி உயிரிழந்தார். மூதாட்டி முகத்தை பூனை கடித்து குதறியது. உறவினர்கள்குன்றக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.