உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடிந்த நிலையில் காவலர் குடியிருப்பு

இடிந்த நிலையில் காவலர் குடியிருப்பு

காரைக்குடி : கல்லலில் உள்ள போலீசார் குடியிருப்பு இடிந்த நிலையில் உள்ளதால் காவலர்கள் தங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.கல்லல் ஊராட்சியில் கல்லல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கள் போலீசார் என 15க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர்.கல்லல் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் ஆறு குடியிருப்புகளுடன் கூடிய காவலர் குடியிருப்பு, தமிழக காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டடங்கள் வெளிப்புறம் முழுவதும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.போதிய பராமரிப்பின்றி கிடப்பதால் குடியிருப்புகளில் இருந்த போலீசார் தற்போது வேறு இடத்தில் குடியிருந்து வருகின்றனர். அருகிலுள்ள காவல் ஆய்வாளர் குடியிருப்பு சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கட்டடங்களை சுற்றிலும் முட்புதர்கள் செடிகள் வளர்ந்து கிடப்பதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. புதிய குடியிருப்புகளை கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி