உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழநிக்கு புறப்பட்ட நகரத்தார் காவடிகள்

பழநிக்கு புறப்பட்ட நகரத்தார் காவடிகள்

காரைக்குடி: குன்றக்குடியிலிருந்து பாரம்பரிய நகரத்தார் காவடிகள் நேற்று பாதயாத்திரையாக பழநிக்கு புறப்பட்டு சென்றனர்.ஆண்டுதோறும் பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு, நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக செய்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாக திரும்புவர். இவ்வாண்டு தைப்பூசத்திருவிழா ஜன.25ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காரைக்குடி, கண்டனுார், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடியை வந்தடைந்தனர். குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து, நேற்று காலை, இடும்பன் வேல் முன்னதாக செல்ல 330 நகரத்தார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக சென்றனர். ஜன.24ம் தேதி காவடிகள் பழநிக்கு சென்றடையும். ஜன.27ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் ஜன.31ம் தேதி காலை, காவடி விடைபெற்று ஊர் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.இதேபோன்று பாரம்பரியமாக காவடிகள் எடுத்துச் செல்லும், 200 நாட்டார் காவடிகள் நேற்று குன்றக்குடியில் இருந்து பழநிக்கு புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை